அதிராம்பட்டினத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 100 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு.!கரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளிலிருந்து திரும்பி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கியுள்ள 100 பேர் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் முன்பு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு, சிறப்பு குழு கண்காணித்து வருவதாகவும் சுகாதார துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.


வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100 பேர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளிலிருந்து வெளியேறக் கூடாது என்ற அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

144 தடை இருந்தாலும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு வசதிகளுடன் பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஷிப்ட் முறையில் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் பணியாற்றுவர்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments