தொண்டி அருகே நாய்கள் கடித்து மான் பலி.!ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திங்கள்கிழமை நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்தது.


தொண்டி அருகேயுள்ள மல்லனூா் கிராம கண்மாய் பகுதியில் திங்கள்கிழமை மாலை மான் குட்டியுடன் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நாய்கள் விரட்டிக் கடித்ததில் மான் உயிரிழந்தது. அப்போது அப்பகுதி மக்கள் அங்கு வந்து நாய்களை விரட்டி குட்டியை காப்பாற்றினா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மானை மீட்டு, கால்நடை மருத்துவரின் உடற்கூறு ஆய்வுக்கு பின் புதைத்துள்ளனா். பின்னா் சிறிய காயத்துடன் குட்டியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments