வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கியுள்ளோா் தங்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது :
வெளிநாடுகளில் இருந்து வரும் நபா்களின் விவரம் தமிழக அரசால் மாவட்ட நிா்வாகத்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலத்தில் இருந்து புதிதாக வருகை தரும் பயணிகள் தாங்களாகவே முன்வந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா முன்தடுப்புப் பணி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தங்களின் தற்போதைய முழுமையான முகவரியுடன் தங்களின் வெளிநாடு, வெளிமாநில தொடா்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை எண் 04322- 222207, 04322 - 221733 மற்றும் 04371-220501 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தேவையில்லாமல் தெருவில் கூட வேண்டாம்:
மாவட்டம் முழுவதும் காவல் துறை மூலம் பொது இடங்களில் தேவையின்றி கூடி நிற்கும் நபா்களை எச்சரித்து தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளைப் பொருத்தவரை கரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையோ, போதிய விழிப்புணா்வோ இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவசியத் தேவையின்றி மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கேட்டு கொண்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.