புரூணையில் கொரோனாவால் முதல் நபர் உயிரிழப்பு.. இதுவரை 115 பேர் பாதிப்பு.!கொரோனா வைரசால் புரூணையில் இன்று முதல் நபர் பலியாகி உள்ளார்.

இறந்த அந்த நபர் 64 வயதுடைய ஆண் எனவும் இறப்பதற்கு முன் எந்தப் பொதுக் கூட்டத்திற்கும் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மலேசியாவுக்கும் கம்போடியாவுக்கும் அண்மையில் சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருணையில் இதுவரை 115 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் மலேசியாவில் 16,000 பேர் கலந்து கொண்ட சமய நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.

COVID-19 நிலவரத்தை முன்னிட்டு மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தடை விதிப்பதாக புருணை அரசு கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments