கோபாலப்பட்டிணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 28 பேர் – யாரும் அச்சப்பட வேண்டாம்.!



கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், கோபாலப்பட்டிணத்தில் 28 பேர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் சமீபத்தில் கோபாலப்பட்டிணம் வந்தவர்கள் தற்பொழுது 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

   வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பொறுத்த வரையில் ஏற்கனவே அவர்கள் வந்திறங்கிய விமான நிலையத்தில் காய்ச்சல் இருக்கிறதா என மட்டும் கண்டறியப்பட்டு, அதன் பிறகு அவரவர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்  காய்ச்சல் அறிகுறி உள்ள நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். 

  இதன்படி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் கோபாலப்பட்டிணம் வந்தவர்களை அரசு வெளியிட்டுள்ள விபாரத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறைனர் அவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் நோயை பொறுத்தவரையில் தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக அறிகுறிகள் தென்படாது.  14 நாட்களுக்கு பிறகு தான் மிகப்பெரிய அளவிலான அறிகுறிகள் தென்படும் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறைனர் மற்றும் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
  
  இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் இந்த குறிப்பிட்ட நாட்களில் ஏதேனும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை முறைப்படி மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டு நோய் தொற்று இருந்தால் அரசு மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பதை நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள் மூலமாக அரசு கண்காணித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கைகளில் எளிதில் அழியாத மை கொண்டு எந்த தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என அச்சிடப்படுகிறது.  எனவே இவ்வாறாக கைகளில் அச்சிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் வீட்டை விட்டு வெளி வரக்கூடாது. ஒருவேளை அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  

   கொரோனா வைரஸ் நோய் வைரஸை பொருத்தவரையில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வெகு விரைவாக பரவக்கூடிய கொடிய நோயாகும். ஆகவே அரசு இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் இந்தியாவிற்குள் வந்தவர்கள் யாரேனும் தனிமைப் படுத்தப் படாமல் இருந்தால் அவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் தங்கள் தகவல்களை கொடுத்து தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பது அரசு அவர்களை கண்காணிக்கும் முறையே தவிர புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் இன்றைய தேதி வரைக்கும் யாருக்கும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. ஆகவே பொதுமக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அரசு சொல்லிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடக்குமாறு GPM மீடியா சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

  அதே சமயம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு எந்த காரணம் கொண்டும் வெளியாட்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments