கரோனா பீதி: இந்தியா உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாருக்குள் நுழைய தடைகரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில் இந்தியா உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் இதுவரை 3119 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசுக்கு இத்தாலி அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இத்தாலியில் நேற்று வரை 366 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாருக்குள் நுழைய அந்நாட்டு அரசு தற்காலிகத் தடையை நேற்று விதித்துள்ளது.

வங்காளதேசம், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் இந்த தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து டெல்லி உள்பட இந்தியாவின் 13 பெருநகரங்களுக்கு வாரந்தோறும் 102 விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments