கரோனா வைரஸ் எதிரொலி: சவூதி அரேபியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை...



சீனாவின் வூஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை வழங்கப்படுவதாகச் சவுதி அறிவித்துள்ளது.


சீனாவிலிருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் இன்று உலகின் பெரும்பான்மை நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில், சுமார் 3,500 பேர் இதன் காரணமாகப் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதிப்பின் தீவிரம் உலகம் முழுவதும் அதிகரித்திருக்கும் சூழலில், பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தனது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறையை அளித்துள்ளது சவுதி அரசு. அரசின் அறிவிப்பின்படி, அனைத்து விதமான அரசு, தனியார்ப் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments