இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு: எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!



இந்தியாவி்ல் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.


தலைநகர் டெல்லி மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதே காய்ச்சல் காரணமாக உத்தர பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் வீடு திரும்பினர்.

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் இன்று மேலும் ஒரு குழந்தைக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இத்தாலியில் இருந்து கொச்சி திரும்பிய தம்பதியின் 3 வயது குழந்தைக்கு இருமல், காய்ச்சல் இருந்ததையடுத்து அவர்கள் முன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் உ.பி.யில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments