கொரோனா: அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு மருத்துவ உபகரணம் வாங்க நவாஸ் கனி எம்.பி ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு.!ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சத்தை கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்காக நவாஸ் கனி எம்.பி ஒதுக்கீடு செய்துள்ளார்.


இதற்கான ஒப்புதலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழக்கினார்.


ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி - ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கும் பணியினை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments