உஷாரய்யா உஷாரு..! இலவச 'இன்டெர்நெட்' தர்றாங்களாம்..!



கொரோனா' வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக 'கொரோனா' விழிப்புணர்வு பதிவுகளோடு, 'இலவச இன்டர்நெட்' தருவதாக கூறி, வதந்திகளை பரப்பி வருகின்றனர்.


'கொரோனா' வைரஸ் பரவுதலை தடுக்கவும், உயிரிழப்பு அதிகரிக்காமல் இருக்கவும், நேற்று முன்தினம், பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தினார்.இந்த நாட்களில் மக்கள் யாரும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இரு கரம் கூப்பி கேட்டுக்கொண்டார். அத்தியாவசியப் பொருட்களுக்கு, எந்த தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்க, தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இதனால், மக்கள் தங்களின் வீடுகளில் டி.வி., மற்றும் மொபைல் போனில் நேரங்களை கழித்து வருகின்றனர்.இலவச இன்டர்நெட் இதனை பயன்படுத்தி, சிலர் கடந்த இரு தினங்களாக, 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் 'கொரோனா' விழிப்புணர்வு பதிவுகளோடு, இலவச 50ஜிபி, 100ஜிபி, இன்டர்நெட் இலவசம், 'கொரோனா வைரஸ் ஆபர்' என்ற 'லிங்கை' அனுப்பி வருகின்றனர்.


சட்டத்துக்கு புறம்பாக நபர்கள் அனுப்பும், 'லிங்க்'கை ஓபன் செய்யும் போதே வங்கி தகவல், வீடியோ, புகைப்படம், 'கால் ரெக்கார்டு' உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் எடுக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டர்நெட் தரப்படுமெனில், சம்பந்தப்பட்ட 'நெட்வொர்க்' நிறுவனங்களின் மூலமாக, உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். அதற்காக நீங்கள் எந்த எஸ்.எம்.எஸ்., 'மெசேஜூம்' அனுப்ப தேவை இல்லை.நீங்கள் மற்ற குழுக்களுக்கு 'மெசேஜ்' ஒன்றை 'பார்வேர்ட்' செய்தால், உங்களுக்கு இலவச இன்டர்நெட் கிடைக்கும் என்பதும் முற்றிலும் பொய். இலவச இன்டர்நெட்டுக்கு மயங்கி, யாரும் ஏமாந்து விடாதீர்கள்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments