கோபாலப்பட்டிணம் சகோதர, சகோதரிகளே வதந்தியை பரப்பாதீர்கள்.!



கோபாலப்பட்டிணம் சகோதர சகோதரிகளே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். அங்கே வந்துடுச்சாம்,இங்கே வந்துடுச்சாம்.. அவருக்கு அப்படியாம்..அந்த வீட்டை சீல் வைத்து விட்டார்களாம்.. அந்த தெருவில் ஒருவருக்காம்..


போன்ற ஏராளமான வதந்தி செய்திகள்.. பஞ்சம் இல்லாமல் பரவி வருகிறது... 

ஏற்கனவே மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தங்கள் பொழுது போக்குக்காக, எதையாவது பேச வேண்டும் என்பதற்காக.. இப்படியான வதந்தி பீதிகளை கிளப்பி சமூகத்தை மேலும் அச்சம் அடைய செய்யாதீர். 

செய்வது அறியாது நம் ஊர் மக்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.. நோயின் அச்சமும், குடும்ப பொருளாதார சூழ்நிலையும் நாளுக்கு நாள் பெரும் கவலையில் மக்களை மூழ்கடித்துள்ளது...

நமதூரில் எல்லா ஊர்களை போன்று வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருகை புரிந்துள்ளவர்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் 14 நாட்கள் அவர்களை தனிமை படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளார்களே தவிர யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

''நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:42)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments