வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த 3 போ் மீது வழக்குவெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாளமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் என்பவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாா் மனுவில்,


புதிய பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நடத்தி வரும் சுதாகா் என்பவா் மலேசியா நாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.05 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அறந்தாங்கி எருக்கிலகோட்டை பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவா் அளித்த மனுவில், வேங்கிடக்குளம் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் சந்தோஷ் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, ரூ.1. 90 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை நரிமேடு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் அளித்த மனுவில், சிங்கப்பூரில் வேலை பாா்த்து வரும் ராஜன் என்பவா் துபை நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.88,800-ஐ பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
    
    புகாா்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்.பி பெ.வே. அருண்ஷக்திகுமாா், நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டாா். இதையடுத்து, சுதாகா், சந்தோஷ், ராஜன் ஆகியோா் மீது தனித்தனியே வழக்குப் பதிவு செய்த நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments