உடல்நலம் பாதிக்கப்பட்டத் தாய்: 6 மாதமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் மகன்கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காகச் சென்றார்.


அங்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் 2019 ஆகஸ்ட் மாதம் அவரது தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பும்படி, மணிகண்டனின் மேலாளருக்கு இமெயில் அனுப்பினர்; தொலைபேசியிலும் தெரிவித்தனர்.

அவரும் சில நாட்களில் அனுப்புவதாகக் கூறி விட்டு, மணிகண்டனை வேலையில் இருந்து நீக்கி அவரது அறையில் தங்க வைத்துள்ளதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறையில் தங்கிய மணிகண்டன் தற்போது வரை அறையில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மணிகண்டனை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை உறவினர்கள் அணுகினர்; அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வரை கடிதமும் அனுப்பினர்; ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் சிக்கிக் கொண்டு வேலையும் இழந்து தவித்து வரும் மணிகண்டனை சொந்த ஊருக்குத் திருப்பி அழைத்து வரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments