சவுதி அரேபியாவில் இறந்த உடலை தாயகம் அனுப்பி வைத்த தமுமுக.!தமிழகத்தை சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அங்குசாமி அவர்களின் மகன் நாகநாதன் அவர்கள் அல் துவைக் (AlTwaik)என்ற துப்புரவு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தாயகம் செல்ல எத்தனிக்கையில் 2 முறை (Saudi airlines,Srilankan airlines) விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.


மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் Saudi German மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 16.02.2020 அன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், சதீஸ் மற்றும் சஞ்சய் என்ற மகன்களும் உள்ளார்கள்.

இச்செய்தியை அறிந்த உறவினர்கள் செய்வதறியாத நிலையில் அஜிஜியாவைச் சேர்ந்த சுல்தான் என்ற சகோதரர் ரியாத் மண்டல மக்கள் தொடர்பாளர் ஜாகிர்பேக் அவர்களிடம் உதவிகோரினார்.

தகவலைப்பெற்ற ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் அப்துல்ஹமீது அவர்கள் ரியாத் மத்திய மண்டல தமுமுக-மமக தலைவர் மீமிசல் நூர்முகம்மது அவர்களின் வழிகாட்டுதலின்படி AlTwaik கம்பெனி சூப்பர்வைசர் மொய்தீன் மற்றும்  அவருடன் பணியாற்றும் கருப்பையாவுடன் இனணந்து மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க தேவையான ஆவணங்களை தயார் செய்தார்.


விரைந்து செயல்பட்டாலும் கம்பெனியிலிருந்து பெறவேண்டிய தொகை மற்றும் உடலை அனுப்புவதற்கான தொகைக்கான கையொப்பமிடலில் தாமதம் ஏற்பட்டது. கம்பெனி மேனேஜர் அபு ஆதிலை நேரில் சந்தித்து பிரச்சினைகளை தெளிவாக்கி கையொப்பம் பெற்று, உரிய ஆவணங்களை இந்திய தூதரக ஒத்துழைப்புடன் மருத்துவமனையில் ஒப்படைத்து நாகநாதனின் உடல் பெற்று கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 12.03.2020 வியாழக்கிழமை  இரவு 10.30 மணியளவில் ஶ்ரீலங்கன் விமானம் மூலமாக நாகநாதன் உடல் திருச்சி விமான நிலையத்திற்கு 13.03.2020 காலை வந்தடைந்தது. தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாகான் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்புடன் இராமநாதபுரம்/ரெகுநாதபுரத்திலிருந்து இறந்த நாகநாதனின் தம்பி ராமசந்திரன்  மற்றும் உறவினர்களை தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி ஏர்போர்ட் அழைத்து வந்து ஏர்போர்ட் நடைமுறைகளை முடித்து கொடுத்து நாகநாதனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அதுமட்டுமில்லாமல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று இடுகாடு வரை உடனிருந்து உதவி செய்தனர். மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உரிய நேரத்தில் ராமநாதன் உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

என்றென்றும் மனிதநேய பணியில் ;

தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவுதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments