கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பில் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்.! (படங்கள்)கோபாலப்பட்டிணத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இன்று 26.03.2020 வியாழக்கிழமை கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. குறிப்பாக, கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசல், பழுதடைந்த ஊராட்சி கட்டடங்கள் மற்றும் மக்கள் நடமாடும் தெருக்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கிராமங்கள் முழுவதும் குப்பை அகற்றி பிளீச்சிங் பவுடர் துாவி துாய்மை காவலர்கள் துாய்மைப்படுத்தினர். 


மேலும், கொரோனா வைரஸ் பரவும் முறைகள் மற்றும் அதை தடுக்கும் வகை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments