புதுக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து... பேருந்துகள் எரிந்து நாசம்! (படங்கள்)கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவையடுத்து போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பேருந்துகள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.


‌புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பணிமனையில் நூறுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பேருந்தில் திடீரென தீப்பற்றி காற்றில் வேகமாகப் பரவி பேருந்து முழுவதும் எரியத் தொடங்கிய நிலையில் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அடுத்தடுத்த பேருந்துகளிலும் தீ பற்றியது. தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்துகள் முழுமையாக எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் சுமார் ஆறு பேருந்துகள் முழுமையாகச் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‌பேட்டரிகளில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு பேருந்தில் தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments