கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சட்னி , சமோசா கேட்ட வாலிபருக்கு கிடைத்த தண்டனை !!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உத்தரபிரதேச மாநில ராம்பூரில் மாவட்ட நீதிபதி ஆஜநேய குமார் தலைமையில் கொரொனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தனக்கு, சட்னியுடன் சமோசா வேண்டும் என்று கேட்டுள்ளார். எதிர்முனையில், இது கொரோனா கட்டுப்பட்டு அறை என்று ஓரிரு முறை தெரிவித்தும், எச்சரித்தும் உள்ளனர்.

எனினும் அந்த வாலிபர் மீண்டும் மீண்டும் போன் செய்து, சமோசா கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து, அந்த இளைஞருக்கு அவர் விரும்பியவாறே 4 சமோசாக்களை சட்னியுடன் அனுப்புமாறு நீதிபதி ஆஜநேயகுமார் உத்தரவு பிறப்பித்தார்.

அதேநேரம், அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக, சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனையும், நீதிபதி வழங்கி உத்தரவிட்டார். இறுதியில் நீதிபதியின் உத்தரவுப்படி, அவர் சாக்கடையை சுத்தம் செய்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments