அம்மாபட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வங்கி கணக்கில் இருந்த பணத்தை திரும்ப பெற்ற மக்கள்..!குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று 12.11.2020 சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முமுவதும் தொடர் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.


தொடர்ந்து 24 மணி நேரமும் கண்டன கோஷங்களும், ஆர்ப்பாட்டங்களும், கண்டன உரைகளும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து நேற்று மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் கணக்கில் இருந்த பணத்தை எடுத்ததால் பரபரப்பும், ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அங்கு உள்ள இரண்டு தேசிய வங்கியில் பணத்தை திரும்பப்பெற்று எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments