ரூபாய் நோட்டுகளால் கரோனா பரவ வாய்ப்பா..? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்!சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது.


 உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. தற்போது கரோனா வைரஸ் ரூபாய் நோட்டுக்களாலும் பரவுகின்றது என்று செய்தி வெளியானது.

அழுக்கு படிந்த பணத்தையோ மற்றும் காய்ச்சல் வந்தவர் பயன்படுத்திய நோட்டுகளையோ அடுத்தவர் பயன்படுத்தும் போது அவர்களுக்கு கரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஒரு செய்தி இணையதளங்களில் வெளியானது. இந்நிலையில் ஆசியாவில் இருந்து பெறப்படும் டாலர்களை அமெரிக்க பெடரல் வங்கி தனியாக வைத்து சோதித்த பிறகே மீண்டும் மறு சுழற்சிக்கு வெளியே அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, " பணத்தை தொட்ட கைகளால் முகத்தையோ அல்லது சுவாச பகுதிகளோயோ தொடக்ககூடாது என்றும், சிறிய பொருட்களை தொடும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Source: நக்கீரன்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments