சமூகநீதி பேச்சாளர் அய்யாவழி பாலமுருகன் கைது…?கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் இருந்து அய்யா வழி பால முருகன் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று உள்ளது காவல்துறை.


அய்யா வழி பால முருகன் அவர்களை கொடைக்கானல் பொது கூட்டம் முடிந்து திண்டுக்கல் சென்றவரை கோவை காவல்துறை விசரானை என அழைத்து சென்று உள்ளனர் காலை இருந்து அவர் செல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது.

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த காவல்துறையினர் கண்டன பொதுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை செருப்பால் அடிப்பேன் என வார்த்தை சொன்னதால் எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்வதாக சொல்லியது.

செல்வபுரம் காவல் நிலையத்தில் கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் ஒன்று கூடுவதை கவனித்த காவல்துறை.

தற்போது அய்யா வழி பால முருகன் அவர்களை செல்வ புரம் காவல் நிலையத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றி உள்ளது அவரை சிறையில் அடைக்க தீவிரமாக காவல்துறை செயல் பட்டு வருகிறது.

கோவை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடத்தில் பேச சென்று கொண்டு உள்ளார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments