புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் ஒருவர் அனுமதி.!புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், புதுக்கோட்டை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இன்று (மார்ச்-26) அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வெளிநாடு சென்ற ஒருவர் சமீபத்தில் வீடு திரும்பியிருந்தார். அவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகித்து ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இன்று சேர்ந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் அந்த நபரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பியுள்ளனர். அங்கிருந்து அவரை, புதுக்கோட்டை நகர் மத்தியில் 300 படுக்கை வசதிகளுடன் உருவாகியுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர்.

கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடுகளில் வாழும் மக்கள், கொரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க கூடாது. அப்படி செய்தால் சுற்றியுள்ள எங்களுக்கு பரவிவிடும் என்று அச்சம் தெரிவித்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வந்த போலீஸார், வீட்டை விட்டு ஏன் வெளியே வந்தீர்கள் என்று போராடியவர்களை விரட்டியடித்தனர். தற்போது கொரோனா அறிகுறி உள்ள அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments