மீமிசலில் காய்கறி மற்றும் மளிகைக்கடை செயல்படும் நேரம் - வர்த்தக சங்கம் அறிவிப்பு.!



காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதனடிப்படையில் மீமிசல் கடைவீதியை பொருத்தவரையில் அன்றாட தேவை மற்றும் அத்தியாவசிய  கடைகளான பால், காய்கறி மற்றும் மாளிகைக்கடைகள் திறக்கப்படும் நேரங்கள் பற்றி மீமிசல் வர்த்தக சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பால் மற்றும் காய்கறி கடைகள் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை (மூன்று மணி நேரம் மட்டுமே) திறந்திருக்கும் என்றும், மளிகைக் கடைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை (மூன்று மணி நேரம் மட்டுமே) திறந்திருக்கும் என மீமிசல் வர்த்தக சங்கம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் தேவையின்றி மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கும் வகையில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மீமிசல் கடைத்தெருவில் மளிகை கடைகள் எதுவும் திறக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்த குறிப்பிட்ட நேரங்களில் வந்து வாங்கி செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு:மருந்தகங்கள்,உணவகங்கள் வழக்கம்போல் நாள் முழுவதும் செயல்படும். அவற்றுக்கு நேர கட்டுப்பாடுகள் கிடையாது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments