அறந்தாங்கி அருகே தனிமைப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை.!புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த வாலிபர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.


கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மரமடக்கி கிராமத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த வாலிபர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.

ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து வந்தவரை, பெற்றோர் தனிமைப்படுத்தியதால் தற்கொலை என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments