குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறக்கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நிதி உதவியாக தங்க மோதிரத்தை வழங்கிய மக்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறக்கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஷாகின் பாக் தொடர் காத்திருப்புப் போராட்டம் கடந்த 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை VIP நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் தினமும் மீமிசல் சுற்றுவட்டார பகுதி மக்கள், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களுக்கு உணவு வழங்குவதற்கு வேண்டி போராட்ட பந்தலில் நிதி சேகரிப்பு பெட்டகம் வைக்கப்பட்டு தினமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் நிதி சேகரிப்பு பெட்டகத்தில் யாரோ ஒருவர் ஒரு மோதிரத்தை வழங்கி இருந்தார். அதுபோல் நேற்று முன்தினம் ஒரு மோதிரம் என இதுவரை இரண்டு மோதிரங்களை வழங்கியிருக்கின்றனர்.
14-வது நாள் தொடர் இருப்பு போராட்டம்..!
நேற்று 14-03-2020 சனிக்கிழமை ஷாகின் பாக் தொடர் இருப்பு போராட்டத்தில் களஞ்சியம் அவர்கள் (திரைப்பட இயக்குனர்), கோவை அய்யூப் அவர்கள் (இஸ்லாமிய அழைப்பு பேச்சாளர்), K. நவாஸ்கனி MP அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இந்த போராட்டத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகமான ஆண்கள் பெண்கள் , சிறுவர்கள் உள்பட திரளானோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.