அம்மாபட்டினத்தில் குடியுரிமை சட்ட திருத்த ஆவணங்களை புதைத்து நூதன போராட்டம்.! (படங்கள்)மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் குடியுரிமை சட்டத்திருத்த ஆவணங்களை புதைக்கும் போராட்டம் நடைபெற்றது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த அம்மாபட்டினத்தில் கடந்த 26 நாட்களாக அப்பகுதி முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 26-வது நாளான நேற்று 14.03.2020 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆவணங்களை சவப் பெட்டிக்குள் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று குழி தோண்டி புதைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இப்போ போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments