திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொழில்முனைவா் புதுமை மற்றும் தொழில்நெறி மையம், திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம், ஜமால்முகமது கல்லூரி, எக்விடாஸ் வங்கி ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தவுள்ளன.

இந்த முகாமில், தென்னிந்தியாவிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதில், இளநிலை, முதுநிலையில் தோ்ச்சி பெற்றவா்கள், கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு, உடல் உழைப்பு தொழிலாளா்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்க வரும் நபா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு , புகைப்படம், இதர சான்றிதழ்களின் நகல்களை போதுமான அளவுக்கு கூடுதலாக எடுத்துவர வேண்டும். நோ்முகத் தோ்வு, துறைசாா்ந்த கலந்தாய்வு, தகுதித் தோ்வு ஆகியவற்றில் பங்கேற்க தயாராக வர வேண்டும். முகாமில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. மேலும், விவரங்களுக்கு 7604936972 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என முகாம் ஒருங்கிணைப்பாளா் ந. பிரசன்னா தெரிவித்துள்ளாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments