கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.! கலெக்டர் தகவல்.!கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வண்ணம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருப்பமுள்ள தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தொண்டுள்ளம் படைத்த பொதுமக்களின் ஆதரவு வேண்டப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கைக்காக 18 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான உடல்நிலை மற்றும் நன்கு வாகனம் ஓட்டத் தெரிந்த நபர்களின் சேவையை மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. எனவே தன்னார்வப் செய்ய விரும்புபவர்கள் கொரோனா தடுப்புப் பணியில் இணைய தனது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

பொதுநல நோக்கில் இப்பணியில் இணைய விருப்பமுள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களது பெயர்களை http://14.139.183.34/covid19/volunteers.php?district=22 என்னும் இணையதள முகவரியில் பதிவு செய்து, உயிர்காக்கும் உன்னதமான சேவையில் பங்கு பெறலாம்

பதிவு செய்த நபர்களை அவர்களது தகுதிக்கேற்பவும், தேவைக்கேற்பவும், தேவைப்படும் நாட்கள் அழைத்து, அவர்களது சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments