தொண்டியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக முதல்வருக்கு புறாக்களின் மூலமாக தூது செய்தி அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொண்டியில் நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு புறாக்களின் மூலமாக தூது செய்தி அனுப்பி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மத்திய அரசின் கொடுங்கோல் சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 20-ஆவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற தொடர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புறாக்களின் மூலமாக தங்களின் செய்தியை அனுப்பி கண்டனத்தை பதிவு செய்வதனர்.


இந்த நூதன போராட்டத்தில் தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் இருப்பு போராட்டம் மற்றும் நூதன போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments