தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.!புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலபட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டிணம் கிளை சார்பில் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு அரஃபா தெரு பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இந்த ஆலோசனை கூட்டதிற்க்கு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் அப்துல் மஜீது தலைமை வகித்தார். இந்த மஷுராவில் கிளை செயலாளர் செய்யது இபுராஹிம் பொருளாளர் அப்துல் ரசாக் துனை தலைவர் முகமது அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.CAA NRC NPR க்கு எதிராக  தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை முஸ்லிம்களின் போராட்டம் ஓயாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.கிளையின் தாவா பணிகள் வீரியம்படுத்தவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

3.கோபாலப்பட்டிணத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் CAA,NRC,NPR போன்ற சட்டங்களுக்காக ஆவனம் கேட்க வந்தால் ஆவணங்கள் தரமாட்டோம் என்ற டோர் ஸ்டிக்கர் ஒட்டுவதாக முடிவு செய்யப்பட்டது.

4.எதிர்வரும் மார்ச்-18 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கோபாலப்பட்டிணத்தில் உள்ள மக்களை அழைத்து செல்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

5.மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டத்திற்க்கு நமது ஊரில் இருந்து வாகனம் புதன்கிழமை காலை 7:30 மணிக்கு புறப்படும், வாகனம் புறப்படும் இடங்கள் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகிலும்,அவுலியா நகர் பள்ளிவாசல் அருகிலிருந்து புறப்படும் என ஆலோசனை செய்யப்பட்டது.


இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments