சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்க கூடாது'- சிஏஏ குறித்து விஜய் கருத்து.!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்க கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டமாக்க வேண்டும் என சிஏஏ குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக பேசினார். மேலும் பேசிய அவர், வாழ்க்கை நதி மாதிரி நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள்.  இளைய தளபதியாக இருக்கும் போது ரெய்டு இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. 

உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும்.என்ன  நடந்தாலும் நமது வாழ்க்கையில் கடமையை செய்துகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டும். விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல, அவரது உள்ளத்திலும் எனக்கு இடம் கொடுத்திருக்கிறார். ரசிகர்களின் வருகை தவிர்க்கப்பட்டது எனக்கு வருத்தத்தை தருகிறது. கொரோனா அச்சுறுத்தலால்  இந்த விழாவிற்கு ரசிகர்கள் வருவதை தவிர்க்கப்பட்டதை  அரை மனதோடு தான் நான் ஒப்புக்கொண்டேன் என்றார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments