கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு.! மதுரையை சேர்ந்த நபர் உயிரிழப்பு.!இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னை, திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஒருவர் என மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மற்ற இருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலும், மதுரை நபர் வெளிநாட்டுக்குச் சென்றவர் அல்ல. தமிழகத்தில் இருந்தே அவருக்கு வைரஸ் பாதித்துள்ளது தெரியவந்தது.

கொரோனா பாதித்த 54 வயதான மதுரை நபரின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா சிறப்பு பிரிவில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நபருக்கு ஏற்கெனவே இதர உடல்நிலை பிரச்சனைகள் இருந்தன. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வந்தார்.

ஏற்கனவே நீரழிவு போன்ற பாதிப்புகள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments