கொரானா வைரஸை கண்டுபிடிக்க புதிய கருவியை தயாரித்த இந்தியா.! இனி செலவு இவ்வளவுதான்...!புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யுசன் என்ற நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவை கண்டறிந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.


தமிழகத்தில் சென்னை, தேனி, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியது.


தமிழகத்திலும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் சென்னை அப்போலோ ஆய்வகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு அரசு மருத்துவமனைகளில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாத நிலையில், தனியார் ஆய்வகங்கள் ரூ.4500 கட்டணமாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யுசன் என்ற நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவியை கண்டறிந்துள்ளது. ரூ.80 ஆயிரம் மதிப்பு கொண்ட ஒரு கருவி மூலம் 100 பேரை சோதனை செய்ய முடியும்.

இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு கழகமும் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வணிக ரீதியாக இந்த கருவிகளை அந்நிறுவனம் விற்க முடியும்.

வரும் வாரத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பரிசோதனை கருவிகளை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பரிசோதனை கருவிகளின் விலையில் கால்வாசி பங்கு மட்டுமே இந்த பரிசோதனைக் கருவி விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1200-க்கு கொரோனா பரிசோதனையை இந்த கருவி மூலம் மேற்கொள்ள முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரூ4500 மதிப்புள்ள கொரோனா பரிசோதனை, இந்த புதிய கருவி மூலம் குறைந்த விலையில் அதிகம்பேரைச் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments