புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.1,000 சிறப்பு நிவாரண உதவித்தொகை : கலெக்டர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட   கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:-


கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் நிமித்தமாக தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி, தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1,000 வீதம் சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மீனவர் நலவாரியம் மூலம் ரூ.1,000 சிறப்பு நிவாரண உதவித் தொகை கிடைக்கப்பெறவில்லை எனில் புதுக்கோட்டை மீன்துறை உதவி இயக்குநர், எண் 1 லெட்சுமிபுரம் 1ம் வீதி அலுவலகத்தை 04322-220069 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது adfpudugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தங்களுடைய மீனவர் நலவாரிய அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, கைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

 இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments