"10 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்"- தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


குறிப்பாகத் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நடப்பாண்டு 10- ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்தன. 

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும். தேர்வு அட்டவணை மே 3-ம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை விடப்படும். தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த நிர்பந்தித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments