ஹைதராபாத்தில் இருந்து நடந்தும், லாரி மூலமும் ஊருக்கு வந்த பொறியியல் மாணவா்கள்.!கொரோனா தொற்றால் கடந்த மாதம் 24-ம் தேதி திடீரென்று நாடு முமுவதும் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவா்களும் படிக்கச் சென்ற மாணவா்களும் பெரும் அவதிப்பட்டனா்.


இந்த நிலையில் அந்தந்த மாநிலம் மற்றும் மாவட்டங்களில் அவா்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மனதளவிலும் பாதிக்கப்பட்டனா். இதைதொடா்ந்து பலா் சிரமத்தையும் எதிர்பார்க்காமல் நடந்தும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்கிற வாகனங்களில் ஏறியும் பெரும் கஷ்டப்பட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளனா்.

இதே போல் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த ஷாஜி மற்றும் மொ்லின் ராஜ் இருவரும் ஹைதராபாத்தில் பொறியியல் படித்து கொண்டிருந்தனா். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதால் அந்த மாணவா்கள் இருவரும் ஊருக்கு வர முடியால் அங்கே இருந்தனா். 14-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளா்த்தப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த அந்த மாணவா்களுக்கு மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தவா்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல முடிவு செய்தனா். 

இதையடுத்து அவா்கள் இருவரும் கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து 125 கிமீ நடந்து வந்தனா். பின்னா் அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை லாரியில் வந்தனா். அதன்பிறகு 50 கிமீ தூரம் வரை நடந்து வந்த அவா்கள் இன்னொரு லாரியில் ஏறி நாமக்கல் வந்தனா். பின்னா் மதுரையை நோக்கி  நடந்து வந்த அவா்களை காவல் ஆய்வாளா் செல்வராஜ் உதவி செய்து அவா்கள் இருவரையும் நாகா்கோவிலுக்கு முட்டை ஏற்றி வந்த லாரியில் ஏற்றி அனுப்பி  வைத்தார். ஊருக்கு வந்த அந்த இருவரையும் பெற்றோர்கள் ஆரக் கட்டி தழுவினார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments