மறமடக்கி கிராமத்தில் தனிமையில் இருக்கும் இளைஞர்களுக்கு புத்தகம் வழங்கிய வருவாய் துறையினர்!



கரோனா கிருமி தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். அதனால் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.


 இந்த நிலையில் தான் வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தனிபை்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமையில் இருப்பவர்கள் தொடர்ந்து கரோனா பற்றிய செய்திகளை பார்த்து அச்சப்படுவார்கள், இதனால் மன உளைச்சல் ஏற்படும் என்பதால் கிராம நிர்வாக அலுவலர் ராஜா தலைமையிலான வருவாய் துறையினர் அனைவர் வீடுகளுக்கும் சென்று அவர்களை கண்காணித்து விசாரணை செய்ததுடன் அவர்களின் மனநிலையை பாதுகாக்கும் பொருட்டு நல்ல புத்தகங்களை வழங்கினார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments