அறந்தாங்கியில் 144 தடை உத்தரவை மீறி திறந்த 7 கடைகளுக்கு சீல்.!அறந்தாங்கியில் 144 தடை உத்தரவை மீதி திறந்திருந்த கறிக்கடை உட்பட 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் தடை உத்தரவை மீறி திறந்து இருந்த ஒரு ஆட்டோ உதிரிபாக கடை, மூன்று பெட்டிக்கடை, அறந்தாங்கி அக்னி பஜார் பகுதியில் உள்ள 3 ஆட்டு இறைச்சி கடைகளுக்கும் நகராட்சி ஆணையர் முத்துகணேஷ், சுகாதார அலுவலர் சேகர் ஆகியோர் போலீசார் முன்னிலையில் நேற்று ‘சீல்’ வைத்தனர். பின்னர் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments