கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு, உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் காய்கறிகளை நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாய தொழிலாளர்கள் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி செல்ல வேளாண்மைத்துறை அதிகாரிகளால் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை தொடர்பான உதவி தேவைப்பட்டால், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்..,
ஆவுடையார்கோவில் வட்டாரம்- 9944669129,
மணமேல்குடி வட்டாரம்- 8778083688,
புதுக்கோட்டை வட்டாரம்- 6381741240,
கந்தர்வகோட்டை வட்டாரம்- 9442275726,
திருவரங்குளம் வட்டாரம்- 9965668408,
கறம்பக்குடி வட்டாரம்- 9123544665,
அறந்தாங்கி வட்டாரம்- 6383563065,
திருமயம் வட்டாரம்- 9843322167,
அரிமளம் வட்டாரம்- 8248912975,
பொன்னமராவதி வட்டாரம்- 9442684565,
அன்னவாசல் வட்டாரம்- 9442516485,
விராலிமலை வட்டாரம்- 9360220317,
குன்றாண்டார்கோவில் வட்டாரம்- 8667053064
ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments