தொண்டி அருகே சூதாடியவர்கள் கைது; 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.!தொண்டி அருகே உள்ள கடம்பனேந்தல் கிராமத்தின் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து தொண்டி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் கூட்டமாக அமர்ந்து ஏராளமானோர் சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். 

அதில் நம்புதாளையை சேர்ந்த காதர் முகமது, தொண்டி ஒடாவி தெரு நைனார் அலி, குளத்தூர் அலகுராஜ், பாசிப்பட்டினம் நிஜாமுதீன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரத்து 100 மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 15 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments