நூறு நாள் வேலை திட்ட சம்பளம் ரூ.256-ஆக உயர்வு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!



தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படுகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.


அண்மையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வும் அடக்கம்.

அதன்படி இந்த மாதம் ஏப்ரல் முதல், ஊழியர்களுக்கான ஊதியம் பணிநாள் ஒன்றுக்கு ரூ.256 ஆக உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தொகை ரூ.229ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அரசாணையும் வெளியிட்டுள்ளது. பணியாளர்களுக்கான ஊதியத்தைக் கணக்கிடும் மென்பொருளான செக்யூர் என்னும் மென்பொருளில் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டு 256ஆக பதிவு செய்யப்பட்டது.

முந்தைய சம்பளத் தொகையிலிருந்து சுமார் 27 ரூபாய் உயர்த்தி புதிய சம்பளத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments