`கொரோனா' வைரஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான தகவலை தெரிவித்தால் 20 ஆயிரம் திர்ஹாம் அபராதம்.! அமீரக அரசு எச்சரிக்கை.!!அமீரக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் வேகமாக பரவும் `கொரோனா' வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


ஆனால் `கொரோனா' வைரஸ் பற்றிய மருத்துவ தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் `கொரோனா' வைரஸ் குறித்து ஒரு சில தவறான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரப்படுகிறது. எனவே தவறான தகவல்களை பொதுமக்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவல்களை தெரிவிப்பவர்கள் மீது 20 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments