கொரோனா உதவி குழுமத்தின் 31.03.2020 முதல் 15.04.2020 வரை வரவு மற்றும் செலவு விபரம்!!!கோபாலப்பட்டிணம் GPM MEDIA சார்பாக #ஏழைகளுக்கு_உதவிடுவோம்..! #உணவிற்கு_உதவுவோம்..! என்று குழுமம் ஆரம்பிக்கப்பட்டு 144 தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்து செய்து வருகின்றோம்.

கொரோனா உதவி குழுமத்தின் 31.03.2020 முதல் 15.04.2020 வரை வரவு மற்றும் செலவு விபரம்!!!

நமது கோபாலப்பட்டிணத்தில் 144 தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் கோபாலப்பட்டிணம் GPM MEDIA கொரோனா உதவி குழுமம் என்கின்ற அடையாளத்துடன் களம் இறங்கி பொருளாதார உதவியை சேகரித்து வருகின்றோம். 

GPM MEDIA கொரோனா உதவி குழுமத்தின் மூலம் முதற்கட்டமாக தினக்கூலிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் என 150 குடும்பங்கள் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் இறைவனின் நாட்டப்படி, 150 குடும்பங்களுக்கு மளிகை மற்றும் காய்கறி பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

31.03.2020 முதல் 15.04.2020 வரை வரவு மற்றும் செலவு விபரம்:

31.03.2020 முதல் 14.04.2020 வரை வந்த வரவு - 256,780

03.04.2020 முதற்கட்டமாக 50 குடும்பங்களுக்கும்
07.04.2020 அன்று இரண்டாம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பின் செலவு (அரிசி 5கி வீதம் 50 நபர்களுக்கு துபாய் அஜ்மான் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஊழியர்கள் மூலம் வரவு)  - 128,950
மூன்றாம் கட்டமாக 15.04.2020 அன்று 50 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட  செலவு - 70,200

மொத்தம் வரவு- 256,780

மொத்தச் செலவு - 199,150

பாக்கி (இருப்பு) - 57,630

இன்ஷா அல்லாஹ் 4-ஆம் கட்டமாக மீதம் இருக்கும் இருப்பு தொகையை இரண்டாம் கட்டமாக கணக்கெடுக்கப்பட்டுள்ள தினக்கூலிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் நாட்களில் மளிகை மற்றும் காய்கறிகள் கொன்ட தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். (நபிமொழி, ஹாகிம் - 7307)

தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும் குறைப்பதில்லை _(முஸ்லிம் 5047)

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:

கோபாலப்பட்டிணம் கொரோனா உதவி குழுமம்,
கோபாலப்பட்டிணம், 
மீமிசல், 
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

தொடர்புக்கு:

அப்துல் சுக்கூர் - +91 97902 82250

முகம்மது ராவுத்தர் - +91 77087 41786

சாகுல் ஹமீது - +91 883 898 6985

முகம்மது யஹ்யா - +91 90877 74541

வாசிம் அக்ரம் - +91 96592 16376

B.அசாருதீன் - +91 85266 30312

K.அசாருதீன் - +91 86102 16617

GPM மீடியா - wa.me/918270282723

குறிப்பு: GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக வசூல் செய்யப்படும் அனைத்து பொருளாதார நிதிகள் பற்றிய வரவு மற்றும் செலவு சம்மந்தமான விபரங்கள் அனைத்தும் இறுதியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments