புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக #Covid19 #144 தடை உத்தரவு காரணமாக பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்புகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இரண்டு கட்டமாக 100 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு கொடுக்கும் பொருட்டு பல நன்கொடையாளர்களிடம் இருந்தும் நமது ஊரில் உள்ள சமூக சேவைகளில் ஈடுபடும் அமைப்புகளிடம் இருந்தும் நன்கொடை பெற்று நேற்று 15.04.2020 புதன்கிழமை மூன்றாம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
✴மூன்றாம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக GPM மீடியா அட்மீன்கள் மற்றும் சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் முன்னிலையில் பயனாளிக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்புகள் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது.
✴இந்த பணியை மிகச் சிறப்பாக செய்த கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக பாராட்டுக்கள்
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே...
✴இதற்காக பொருளாதார உதவியளித்த உள்ளூர்வாழ் மக்கள், சுற்றுவட்டார மக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் சகோதர நல்லுள்ளங்களுக்கும் மற்றும் இதற்காக உழைத்த அனைத்து சகோதரர்களுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அலப்பெரிய நன்மைகளை வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றோம். ஆமீன்....
எங்களுடைய பணிகள் வெற்றியடைய இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.
தர்மம் பற்றி திருக்குர்ஆன்:
தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;)
எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது;
அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்;
நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:271)
மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:
கோபாலப்பட்டிணம் கொரோனா உதவி குழுமம்,
கோபாலப்பட்டிணம்,
மீமிசல்,
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு:
அப்துல் சுக்கூர் - 97902 82250
முகம்மது ராவுத்தர் - 77087 41786
சாகுல் ஹமீது - 883 898 6985
முகம்மது யஹ்யா - 90877 74541
வாசிம் அக்ரம் - 96592 16376
B.அசாருதீன் - 85266 30312
K.அசாருதீன் - 86102 16617
GPM மீடியா - wa.me/918270282723
குறிப்பு: GPM மீடியா கொரோனா உதவி குழுமம் சார்பாக வசூல் செய்யப்படும் அனைத்து பொருளாதார நிதிகள் பற்றிய வரவு மற்றும் செலவு சம்மந்தமான விபரங்கள் அனைத்தும் இறுதியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.