ஆலங்குடியில் ஊரடங்கால் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டு இறுதி சடங்கு!புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் வர முடியாததால் நான்கு பேர் மட்டும் கலந்துகொண்டு இறுதி ஊர்வலத்தை நடத்தி உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் பாஞ்சாலி. மூதாட்டியான இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். 

நேற்று இரவு முதல் இறுதிச் சடங்குகளை செய்யும் அவரது உறவினர்கள் வர வாய்ப்புள்ளதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரது உறவினர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வர முடியவில்லை. இதனையடுத்து நான்கு பேர் மட்டும் கலந்துகொண்டு மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் . மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யும் அவரது மகள் வர முடியாததால் மூதாட்டியின் பேரன் இறுதி சடங்குகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments