மீமிசல் பகுதி வாழ் வடமாநில தொழிலாளர்களுக்கு கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் உணவுக்கான பொருட்கள் வழங்கல்.!கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக #Covid19  #144  ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக வட மாநிலத்தவர்களுக்கு நிவாரணம் இன்று  இரண்டாம் கட்டமாக (10.04.2020)   வேலைக்கு போக முடியாமல் அன்றாடம் உணவுக்கு கஷ்டப்படும் வட மாநிலத்தவர்களுக்கு  அரிசி,ஆட்டா மாவு,உருளை கிழங்கு,வெங்காயம் போன்ற பொருட்கள்   வழங்கப்பட்டது. 

இந்த பணியை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சகோதரர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினர்.

இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதே - நபி (ஸல்)

இதற்காக பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் இறைவன் அருள்புரிவானாக...

என்றும் சமுதாய மற்றும் மார்க்க பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
9715503699


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments