மீமிசல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 750 மது பாட்டில் அழிப்பு.! போலிசார் அதிரடி!!



மீமிசல் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 750 மது பாட்டில்களை போலீசார் நேற்று 12.04.2020 அழித்தனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மீமிசல் போலீசார் தடையை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து 750 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் அவர்களின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் அனைத்து மது பாட்டில்களும் குழிதோண்டி அதில் ஊற்றி அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1,440 மது பாட்டில்கள், கறம்பக்குடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 967 மது பாட்டில்கள், ஆலங்குடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 450 மது பாட்டில்கள், விராலிமலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 410 மது பாட்டில்கள் என நேற்று அந்ததந்த காவல் நிலையங்களின் வளாகங்களில் பள்ளம் தோண்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments