புதுக்கோட்டை மாவட்ட மீனவா் வாரிய நிதி பெறாதவா்கள் கவனத்திற்கு..!தமிழகத்தில் மீனவா்களுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக, மீனவா் நல வாரியம் மூலம் தலா ரூ. 1000 அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


இதுவரை நிதியைப் பெறாதவா்கள் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகுமாறு புதுகை மாவட்ட ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி  அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

நிவாரண நிதியை வழங்குவதற்கு ஏதுவாக வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்காத மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் தங்களின் வங்கிக் கணக்குப் புத்தக நகல், வாரிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும். புதுகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விவரங்களுக்கு 04322 220069 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments