கோட்டைப்பட்டினம் பொது மக்களுக்கு: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு.!கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாநிலத்திலிருந்து மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து யாரேனும் வந்து இங்கே தங்கி இருந்தால் தாமதப்படுத்தாமல் அவர்களாக முன்வந்து வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஜமாஅத் நிர்வாகம் ஆகியவற்றில் யாரிடமாவது உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அவ்வாறாக தகவல் தெரிவிக்காமல் இங்கு தங்கி இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

எனவே பொதுமக்கள் தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தி இந்த கொரோனா நோயிலிருந்து பாதுகாத்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் தெரிவிக்கவேண்டிய தொடர்பு கைப்பேசி எண்கள்:-

காவல் ஆய்வாளர்- 9498158700

கிராம நிர்வாக அலுவலர்- 9751641493

காவல் தனிப்பிரிவு- 9498161071

ஊராட்சி தலைவர்- 9865333092

சுகாதார ஆய்வாளர்- 8610193456

ஜமாஅத் நிர்வாகம்- 9942441004

Covid19 தன்னார்வலர்- 9443576630

தகவல்: F.முஹம்மது லாபிர், கோட்டைப்பட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments