புதுக்கோட்டை மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சிறப்பு நிவாரண தொகை.!



தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக சட்டசபையில் அறிவித்ததை தொடர்ந்து,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் சிறப்பு நிவாரண தொகை ரூ.1000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுனர்கள் நலவாரியம் ஆகியவற்றில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணை புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு சமர்ப்பிக்காதவர்கள் தங்களுடைய பெயர், நலவாரிய பதிவு எண், செல்போன் எண் மற்றும் உறுப்பினர்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டையின் முதல் பக்க நகல் ஆகிய விவரங்களை wa.me/9600266778 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) புதுக்கோட்டை அலுவலக மின்னஞ்சல் losss-pu-du-k-ott-ai@gm-a-il.com மூலமாகவோ விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments