கோபாலப்பட்டிணத்தில் அடிக்கடி மின்தடையால் மக்கள் கடும் அவதி..!



கோபாலப்பட்டிணம் மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.


கொரனோ பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற எதற்கும் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியை பொறுத்தவரை 80 சதவீத மக்கள் இதனை பின்பற்றி வருகின்றனர். வீடுகளில் முதியவர்களும், சிறுவர், சிறுமிகளும் முடங்கிக் கிடக்கின்றனர் அனால் கடந்த சில நாட்களாக மீமிசல் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மின் தடை செய்யப்படுவதால் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, வீடே கதியென கிடக்கும் மக்கள் நலன் கருதி, மின் தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments